என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » பூ விலை உயர்வு
நீங்கள் தேடியது "பூ விலை உயர்வு"
தோவாளை மார்க்கெட்டில் மல்லிகை பூ விலை உயர்ந்து கிலோ ரூ.1000-க்கு விற்பனையானது.
ஆரல்வாய்மொழி:
குமரி மாவட்டம் தோவாளையில் பிரசித்தி பெற்ற பூ மார்க்கெட் உள்ளது. இங்கு பல மாவட்டங்களில் இருந்தும் பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. இங்கு குமரி மாவட்டம் மட்டுமின்றி அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் வியாபாரிகள் பூக்களை வாங்கி செல்வார்கள். இங்கு முக்கிய விசேஷ நாட்களில் பூக்களின் விலை உயர்ந்தும், மற்ற நாட்களில் விலை குறைந்தும் காணப்படும்.
இந்தநிலையில் நேற்று மார்க்ெகட்டில் மல்லிகை பூவின் விலை உயர்ந்து காணப்பட்டது. அதன்படி நேற்று முன்தினம் ரூ.800-க்கு விற்பனையான மல்லிகை நேற்று ரூ.200 உயர்ந்து ரூ.1000-க்கு விற்பனையானது. இன்று (செவ்வாய்கிழமை) கிறிஸ்தவர்களின் கல்லறை திருநாள் என்பதால் பூக்களின் தேவை அதிகமாக இருந்தது. இதனால், வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கிச் சென்றதால் விலை உயர்ந்தது.
மார்க்கெட்டில் விற்பனையான மற்ற பூக்களின் விலை விவரம் கிலோவில் வருமாறு:-
அரளி ரூ.170, பிச்சி ரூ.400, முல்லை ரூ.350, சம்பங்கி ரூ.125, கனகாம்பரம் ரூ.500, வாடாமல்லி ரூ.60, துளசி ரூ.40, தாமரை(100 எண்ணம்) ரூ.2000, கோழிபூ ரூ.60, பச்சை (ஒரு கட்டு) ரூ.8, ரோஸ் பாக்கெட்(100 எண்ணம்)ரூ.40, பட்டன் ரோஸ் ரூ.160, ஸ்டெம்பு ரோஸ் (ஒரு கட்டு)ரூ.250, மஞ்சள் கேந்தி ரூ.75, சிவப்பு கேந்தி ரூ.80, சிவந்தி மஞ்சள் ரூ.100, சிவந்தி வெள்ளை ரூ.250, கொழுந்து ரூ.80, மரிக்கொழுந்து ரூ.120.

வேலாயுதம்பாளையம் பகுதியில் வரத்து குறைவால் பூ விலை உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வேலாயுதம்பாளையம்:
கரூர் மாவட்டம், நடையனூர், முத்தனூர், கவுண்டன் பதூர், சேமங்கி, மரவா பாளையம். உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் குண்டு மல்லி, முல்லைப்பூ, சென்டு மல்லி, அரளி, செவ்வந்தி, கனகாம்பரம், ரோஜா போன்ற வகைகளையும், மருவு, துளசி, கோழிக் கொண்டைப்பூ போன்ற தழை வகைகளையும் பயி ரிட்டுள்ளனர்.
இப்பகுதிகளில் பூக்கும் பூக்களை வாங்குவதற்கு வேலாயுதம்பாளையம், கொடுமுடி, பிலிக்கல் பாளையம், பாண்டமங்கலம், பரமத்தி தண்ணீர் பந்தல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் சில்லரையாகவும், மொத்தமாகவும் விற்பனை செய்கின்றனர்.
கடந்த வாரம் குண்டுமல்லி பூ கிலோ ரூ.800-க்கும் முல்லைப் பூ ஒரு கிலோ ரூ.700-க்கும் அரளி ஒரு கிலோ ரூ.80-க்கும், சம்மங்கி ரூ.60, மஞ்சள் சாமந்தி பூ ரூ.70-க்கும், செண்டுமல்லி கிலோ ரூ.40, ரோஜா ஒரு கிலோ ரூ.200-க்கும் மேலும் கோழிக்கொண்டை ஒருக்கட்டு பூ ரூ.5-க்கும், துளசி ஒரு கட்டு ரூ.5-க்கும், ஆடாதுடை ஒருக்கட்டு ரூ.5-க்கும், வாங்கிச் சென் றனர். இந்த வாரம் குண்டு மல்லி பூ ஒரு கிலோ ரூ.2 ஆயிரத்திற்கும், முல்லை பூ ரூ.1800-க்கும், அரளி ரூ.160-க்கும், சம்மங்கி ரூ.200-க்கும், மஞ்சள் சாமந்தி பூ ரூ.200-க்கும், செண்டுமல்லி கிலோ ரூ.100, கோழிக்கொண்டை ரூ.10-க்கும், ஆடாதுடை ஒருக் கட்டு ரூ.10-க்கும், ரோஜா ஒருகிலோ ரூ.400-க்கும் துளசி ஒரு கட்டு ரூ.10க்கும் வாங்கிச் சென்றனா. பனி காலம் என்பதால் பூக்களின் உற்பத்தி குறைந்துள்ளதாலும், திருமண விஷேசங்களுக்கு அதிக அளவில் பூ தேவையாலும் பூக்களின் விலை கிடுகிடு என உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
×

X